இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணத்தால் பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு திட்டத்தை வழங்குவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கு உணவு திட்டத்தில் உணவின் அளவை குறைப்பதற்கு பதிலாக அதற்காக செலுத்தப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கு உணவுத் திட்டத்தில் அநீதி இழைக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.



