நாட்டில் அதிகரித்து வரும் மற்றுமொரு நோய்த் தொற்று.

0

நாட்டில் டெங்கு நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 7,947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கடந்த மூன்று மாதங்களில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் ஜனவரி மாதத்தில் 5,397 பேராக பதிவாகியுள்ளனர்.

அவ்வாறு பெப்ரவரி மாதத்தில் 1,826 டெங்கு நோயாளர்களும், மார்ச் மாதத்தில் 725 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளது டன் அதற்கமைய 1,433 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக கம்பஹா மாவட்டத்தில் 903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அவ்வாறு யாழ் மாவட்டத்தில் 803 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் குருநாகல் மாவட்டத்தில் 761 டெங்கு நோயாளர்களும் , புத்தளத்தில் 538 டெங்கு நோயாளர்களும் காலியில் 456 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

Leave a Reply