தற்போது நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.
இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகின்றது.
இதன் பிரகாரம் 200க்கும் குறைந்த மாணவர்களின் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சமுர்த்தி பெறும் குடும்பங்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை விநியோகிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக அவர்களுக்கு உணவு பொதி ஒன்றுக்கு 30 ரூபாயும் வழங்கப்படுகிறது.
மேலும் சுகாதார அமைச்சின் பரிந்துரையின் பிரகாரம் இரண்டு தடவைகள் முட்டை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அனைத்து நாட்களிலும் ஏதேனும் பழ வகையும் கட்டாயம் வழங்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.



