நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது.
இந்நிலையில் இன்றையதினமும் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய A முதல் L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலான தலா 3 மணிநேரமும் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியினுள் தலா ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
அவ்வாறு , நாளைய தினம் P முதல் W வரையான வலயங்களில் காலை 8.30 முதல் 5.30 வரையான காலப்பகுதியினுள் 4 மணிநேரமும் 30 நிமிடங்களும், மாலை 5.30 முதல் இரவு 11 மணிவரை ஒரு மணிநேரமும் 50 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



