இந்த இடங்களில் தான் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்..!

0

பூஜை நடக்கும் இடங்கள், சங்கு நாதம் கேட்கும் இடம், சிவநாமம் கேட்கும் இடம், அன்னதானம் வழங்கப்படும் இடம் ஆகிய இடங்களில் லட்சுமி தங்கும் இடங்கள் ஆகும்.

அடக்கமான பெண்கள், கணவனுக்கு கட்டுப்பட்ட மனைவி, மனைவியை காப்பாற்றும் கணவன், தானியவகை இரக்க குணம் கொண்டவர்கள், சுறு சுறுப்பாக இருப்பவர்கள் அகங்காரம் இல்லாதவர்கள், சாப்பிடும்போது ஈரக்காலுடன் அமர்பவர்கள், படுக்க செல்லும்போது உலர்ந்த காலுடன் படுப்பவர்கள், தூய்மையன வெள்ளை ஆடை அணிபவர்கள், துணிவு மிக்க பெண்கள் ஆகியோரிடம் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

மகாலட்சுமியின் அருட்பார்வைக்கு இலக்காக…

மகாலட்சுமியை வணங்கிய பக்தர்கள் அன்னையே, தங்களை சிரமமின்றி தரிசித்து தங்கள் அருளைப்பெற வழி என்ன? பொதுவாக தாங்கள் இருக்கும் இடம் எது, என கேட்டனர்.

மகாலட்சுமி கூறுகையில்,

எந்த இல்லத்தில் அதிகாலையில் விழித்தெழுந்து, நீராடி தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டு என்னுடைய நாமங்களைச் சொல்லி வழிபடுகின்றனரோ, எந்த இல்லத்தின் முன் அதிகாலையில் பசுஞ்சாணம் தெளித்து தரையை சுத்தம் செய்து கோலம் போட்டு திருவிளக்கு ஏற்றி வைக்கிறார்களா, எந்த குடும்பத்தில் கணவனும், மனைவியும் நியம நிஷ்டைகளை முறைப்படி அனுஷ்டித்து தங்களுக்குள் சிறு மனவேறுபாடும் இல்லாமல் என்னை வழிபடுகிறார்களோ, எங்கு ஆசாரம் குறை இல்லாமல் கடைப்பிடிக்கப்படுகிறதோ, எங்கு தர்மம் நன்கு அனுஷ்டிக்கப்படுகிறதோ, எங்கு பூஜை, நடக்கின்றனவோ, எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமலும், தானியங்கள் சிந்தாமலும் இருக்கிறதோ, எங்கு கோபூஜை வேதத்துடன் நடத்தப்படுகின்றதோ அங்கு நான் எப்போதும் இருப்பேன் என்றாள். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply