தமிழகத்தில் அம்மா உணவகங்களில் உணவு விற்பனை சரிவு.

0

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டவை தான் அம்மா உணவகங்கள்.

இந்நிலையில் ஏழை மக்கள் பசியாறும் நோக்கிலே குறித்த உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

அத்துடன் இந்த அம்மா உணவகங்களில் மிகவும் குறைந்த விலையில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளிலும் சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது.

காலையில் இட்லி, பொங்கல் ஆகியவை சுடச்சுட தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகிறது. மதியம் சாம்பார் சாதம், லெமன் சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவையும் வழங்கப்படுகிறது. இரவில் ரூ.1.50-க்கு சப்பாத்தி வழங்கப்பட்டு வருகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அம்மா உணவகங்களை மூடப்போவதாக தகவல்கள் பரவியது. ஆனால் அம்மா உணவகங்கள் எப்போதும் போல செயல்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் அம்மா உணவகங்களில் விற்பனை சரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உதாரணத்துக்கு சில அம்மா உணவகங்களில் ரூ.300 வரையிலேயே தினசரி வருவாய் உள்ளதாகவும், ஆனால் அங்கு பணிபுரியும் பெண்களின் ஊதியம் உள்ளிட்ட செலவு வகைகள் ரூ.1,800 ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி அம்மா உணவகங்கள் நஷ்டத்தில் செயல்பட்டு வந்தபோதிலும் அதனை அரசு தொடர்ந்து அரசு செயல்படுத்தி வருகிறது.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு கடந்த 2021-2022-ம் ஆண்டில் ரூ.120 கோடி செலவாகி இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ரூ.10 கோடி வரை செலவு செய்யப்படுகிறது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மணலி பகுதியில் மட்டும் நீர்நிலை பகுதியில் செயல்பட்ட அம்மா உணவகம் கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளது என்றும் மொத்தமுள்ள 407 அம்மா உணவகங்களில் ஏற்கனவே கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 4 அம்மா உணவகங்கள் மூடப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் 5 உணவகங்கள் தவிர மீதமுள்ள 402 உணவகங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதனை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

Leave a Reply