அவதியில் நாட்டு மக்கள் -அரிசியின் விலை 200 ரூபாவை கடக்கும் .

0

நாட்டில் அரிசியின் விலை 200 ரூபாவை கடக்கும்

நாட்டில் பொருளாதாரத்தின் வீழ்ச்சி அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லையேல் அடுத்துவரும் சில வாரங்களில், ஒரு கிலோ அரிசியின் விலை, 200 ரூபா என்ற எல்லையைக் கடக்கும் என சிறு மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பாரியளவான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி உற்பத்தியாளர்களுக்கு சாதகமான வகையில் அரசாங்கம் செயற்படுகின்ற காரணத்தினால், இந்த நிலை ஏற்படுவதாக அச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையில், அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் டொலர் நெருக்கடியால், அதிகரிக்கும் அரிசி விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அரிசியை பொதி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் பையின் விலையை, 35 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாகவும் அதனுடன் தொடர்புடைய உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

Leave a Reply