தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
இதன்படி, இன்று இரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் விசேட உரை தமிழன் இணையத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



