ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க அன்னாசி பழத்தை இப்படி சாப்பிடுங்க..!

0

பெண்கள் எப்போதுமே ஒட்டிய வயிறுடன் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் அவர்கள் சாப்பிடும் நொறுக்குத் தீனிக்கு கொஞ்சமாவது தொப்பை போடத்தான் செய்யும்.

அதற்காக நடைப்பயிற்சி, ஜாகிங், ஜிம், டயட் என அவர்கள் முயற்சிக்காத விஷயங்களே இருக்காது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.
அன்னாசிப் பழம் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களை எரிக்கக்கூடிய சக்தி கொண்டது.
குறிப்பாக அன்னாசியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் தேங்கியிருக்கும் சதை குறையும்.


ஒரு முழு அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்பளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும்.

அன்னாசி பித்தக் கோளாறுகளையும் குணமாக்கும்.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்.- Source: tamil.eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply