பற்களில் மஞ்சள் கறையா? வெண்மையாக பளிச்சென்று இருக்க…!!

0

பற்களை வெள்ளையாக்க எத்தனையோ வழிகளை முயற்சி செய்திருப்போம், இதற்கு டூத்பேஸ்ட் மட்டுமே தீர்வாகாது.நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறைப்படி, ஆயுர்வேத மற்றும் இயற்கையான பொருட்களை கொண்டு பற்களை வெண்மை நிறத்துக்கு மாற்றலாம்.

ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரியை நன்றாக மசித்து பேஸ்ட் போல செய்து, அதை பயன்படுத்தி வாரத்திற்கு 2 முறைகள் பற்களை தேய்த்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் அல்லது ஸ்டராபெர்ரியை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிடலாம்.

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை: சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நுரை வரும் வரை கலந்து அதை வாயில் உள்ள உமிழ் நீரை துப்பி விட்டு, ஒரு பஞ்சை அதில் நனைத்து பற்களில் தேய்த்து, பின் 1 நிமிடம் கழித்து டூத் பிரஷ் கொண்டு மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.

ஒலிவ் ஆயில் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து, அதனைக் கொண்டு தினமும் காலையில் பற்களை துலக்க வேண்டும்.

இப்படி தொடர்ந்து 5 நாட்கள் செய்து வந்தால், பற்கள் வெள்ளையாக ஜொலிப்பதை உணர்வீர்கள்.

வேப்பிலையை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை பேஸ்ட் உடன் சேர்த்துப் பயன்படுத்தி பற்களை துலக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கி, பற்களும் வெள்ளையாகும்.

பால் மற்றும் தயிரை ஒன்றாக கலந்து, அதனைப் பயன்படுத்தி பற்களை துலக்கி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்து வந்தாலும் நல்ல பலனைப் பெறலாம்.

பிரியாணி இலையை பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனைக் பொண்டு பற்களை தேய்த்து 10 நிமிடம் கழித்து வாயை கொப்பளிக்க வேண்டும்.

இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், பற்களை வெண்மையாகும்.

மஞ்சளை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு பற்களை தேய்த்து, 3 நிமிடம் கழித்து கழுவ வேண்டும், இப்படி செய்தாலும் பற்கள் வெள்ளையாகும்.

Leave a Reply