இன்று 14 மணி நேர நீர் விநியோக தடை.

0

நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 14 மணி நேர நீர் விநியோக தடை இடம்பெறும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் கொழும்பு 7,8,10,12, 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 10 மணி வரையில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும் கொழும்பு 2,3 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறித்த காலப் பகுதியினுள் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply