மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று.

0

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்றைய தினம் நடைபெறுகின்றது.

இந்நிலையில் ஐந்து மாநில தேர்தலில் 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த வாரம் நடைபெற்றது.
.
இன்று ஆறு மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 2 பெண்கள் உள்பட மொத்தம் 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப் படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மார்ச் 10ம் தேதி நடைபெறுகிறது.

Leave a Reply