காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, ‘உங்களுக்கு, உங்களுடைய வாழ்க்கையில் எது தடையாக இருக்கின்றதோ, உங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனை உங்களை துரத்தி வருகின்றதோ, அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்று இறைவனிடம் மனதார உங்களுடைய வேண்டுதலை வையுங்கள்’.
குலதெய்வத்தை மனதில் நினைத்து கொள்ள வேண்டும். வாயில் வேண்டுதலை சொன்னால் போதாது.
மனமுருகி மனதார இந்தப் பிரார்த்தனையை செய்ய வேண்டும்.
இறுதியாக சுவாமிக்கும், நீங்கள் கிண்ணத்தில் வைத்திருக்கும் இந்த இரண்டு பொருட்களுக்கும் தீப தூப ஆரத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.
பூஜையை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமை இந்த பூஜையை தொடங்குகிறீர்கள் என்றால் வெள்ளி, சனி, ஞாயிறு, மூன்று நாட்கள் பூஜையை நிறைவு செய்து திங்கள்கிழமை, ஜாதிகாய்களை மருதாணியில் இருந்து எடுத்து இடித்து அல்லது அரைத்தோ நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் போட்டு, அப்படியே தலைக்கு குளித்து விட வேண்டும்.
மருதாணி மூன்று நாட்களில் உலர்ந்து போயிருக்கும். அந்த மருதாணியை அப்படியே கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். அவ்வளவு தான்.
இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் தகர்க்கப்படும்.
பரிகாரத்தை செய்த பின்பு நீங்கள் மறு ஜென்மம் எடுத்தது போல ஒரு உணர்வு தோன்றும்.
உங்களை பிடித்த பீடை அனைத்தும் கர்மாக்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகுவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.
நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.
