தோல் நீக்கிய பூசணி – 1 துண்டு, தயிர் – 1 தேக்கரண்டி, ஊற வைத்துத் தோல் நீக்கி அரைத்த பாதாம் – 2 தேக்கரண்டி, தேன் – 1 தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் விதை நீக்கப்பட்ட பூசணியைப் போட்டு, ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக மசித்துக்கொள்ளவும்.
அதனுடன் தயிர், அரைத்த பாதாம்,
தேன் ஆகிய மூன்றையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
இந்தக் கலவையை முகத்தில் தடவி 25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.



