ஊதா நிற உருளைக்கிழங்கு பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் அழிக்கும்: ஆய்வு வெளியீடு

0

தென் அமெரிக்காவில் முதன்முதலில் தோன்றிய ‘பர்பிள் உருளைக்கிழங்கு’ ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது என்று கருதப்பட்டு வந்தது. இது தற்போது புற்றுநோயையும் குணப்படுத்தும் என்று நிரூபணமாகியுள்ளது. இந்த உருளைக்கிழங்குகள் வேக வைத்த பின்னர் நீல நிறமாக மாறும் குணமுடையது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஹெர்ஷ்லே புற்றுநோய் நிலையம் மேற்கொண்ட ஆய்வில் ஊதா நிற உருளைக்கிழங்கு பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் அழிக்கவல்லது என நிரூபணமாகியுள்ளது.

இந்த ஆய்வில், அடுமனையில் வேகவைக்கப்பட்ட உருளைக்கிழங்கின் மூலம் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இது பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலியின் மீது சோதனையின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

ஒரு நாளில் நடுத்தர அளவில் உள்ள இந்த உருளைக்கிழங்கை மதியமும், இரவும் எடுத்துக் கொள்வதன் மூலமோ அல்லது பெரிய உருளைக்கிழங்கு ஒன்றை நோய் பாதிக்கப்பட்டவர்கள் உண்ணுவதன் மூலமாக அவர்களுக்கு இந்த புற்றுநோய் குணமாகும் என ஆய்வில் தலைமை வகித்த ஜெய்ராம் கே.பி. வனமாலா தெரிவித்தார்.

உருளையில் உள்ள ஆந்தோசியானின்ஸ், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் ஸ்டார்ச் ஆகியவை இந்தப் புற்றுநோய் செல்களை வேருடன் அழிக்கும் காரணியாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். மேலும், பியூட்ரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் கூட்டுவதன்மூலம், நாள்பட்ட அழற்சியைக் சுருக்கி, புற்றுநோய் செல்களை அழிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையிலேயே புற்றுநோயைத் தடுக்க இந்த உருளைக்கிழங்கைப் உட்கொண்டாலே போதும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply