சட்ட விரோதமான சிகரெட்டுகளை தம்வசம் வைத்திருந்த நபருக்கு நேர்ந்த கதி.

0

சட்ட விரோதமான முறையில் சிகரெட்டுகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று
இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதானவர் நிந்தவூர் மௌலானா வீதியை சேர்ந்த அஹமது லெப்பை முஹமது றிபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளுடன் 2400 சிகரெட்டு பக்கெற்றினை எடுத்து செல்லும் போது கைதாகியுள்ளதுடன் அதன் பெறுமதி 102,000 ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைதான சந்தேக நபர் நிந்தவூர் பொலிஸ் நிலைய காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நிந்தவூர் காவற்துறையினர் நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

Leave a Reply