இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி ராஷ்ட்ரபதி பவனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைய அங்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
அப்போது உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
மேலும், 5 மாநில தேர்தல் உள்பட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



