இலங்கையில் தங்கியுள்ள ரஷ்ய- அகதிகளுக்கான விசா செல்லுபடி காலம் மேலும் நீடிப்பு.

0

இலங்கையில் தற்போது தங்கியுள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் பிரஜைகளுக்கான விசா செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் மேலும் இரண்டு மாதங்களுக்கு இந்த விசா நீடிப்பு இடம்பெறவுள்ளது.

அத்துடன் கட்டணமின்றி வீசா செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் தற்போது 11,463 சுற்றுலா பயணிகளும் 3, 993 உக்ரைன் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் சம்பவம் காரணத்தால் அவர்கள் தங்களது நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply