உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பில் வெளியான தகவல்.

0

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்நிலையில் இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.

ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

மத்திய அரசின் நடவடிக்கையால் உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.

ருமேனியாவின் புகாரெஸ்டில் இருந்து 7-வது விமானம் 182 இந்தியர்களுடன் மும்பைக்கு பயணத்தைத் தொடங்கியுள்ளனர். 8-வது ஆபரேஷன் கங்கா விமானம் புதாபெஸ்டில் இருந்து புதுடெல்லிக்கு 216 இந்தியர்களுடன் புறப்பட்டதாகவும் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்து இருந்தார்.

மேலும் ருமேனியாவின் புகாரெஸ்டில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9-வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply