சூடான நீர்: ஒருபோதும் சூடான நீரை கொண்டு சருமத்தை கழுவக்கூடாது.

0

மேலும் சூடான நீரில் இருந்து வெளிப்படும் ஆவியையும் நுகரக்கூடாது.

அது முகத்தில் படிந்திருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும்.

அதனால் சருமம் நீரிழப்புக்கு உள்ளாகும்.

சூடான நீர் சருமத்தின் உணர் திறனையும் பாதிக்கும்.

சருமத்தை உலர வைப்பதோடு, அதில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய்த்தன்மையையும் அப்புறப்படுத்தி விடும்.

அதற்காக குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவுவதும் கூடாது. அது சருமத்தை நன்றாக சுத்தம் செய்யாது.

குளிர்ந்த நீர் சரும துளைகளை இறுக்கமாக்கிவிடும்.

மேலும் சருமத்தில் அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்களை படரவைத்துவிடும்.

வெதுவெதுப்பான நீரில் சருமத்தை கழுவுவதுதான் நல்லது.

Leave a Reply