இலங்கையில் தங்கியுள்ள உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்.

0

இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலாப் பயணிகளும், 11500 ரஷ்யச் சுற்றுலாப் பயணிகளும் தங்கியுள்ளனர்.

குறித்த சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக உக்ரைன் சுற்றுலாப் பயணிகளினால் நாடு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறான சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பது குறித்த யோசனை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு குடிவரவு குடியகழ்வு திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply