குருநாகலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகமொன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
இதற்கமைய குறித்த அலுவலகம் எதிர்வரும் சனிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரதானியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக ரோஹித ராஜபக்ச களமிறங்குவார் என பலரும் ஊகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கடந்த காலங்களில் ரோஹித ராஜபக்ஷ பல சந்தர்ப்பங்களில் குருநாகல் நகரத்திற்கு சென்று சமூக நல நடவடிக்கைகளில் ஈட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.



