ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மின் பந்தங்களை ஏந்திய வண்ணனம் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தனர்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற அவையில் மீண்டும் அமளி ஏற்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் மின் துண்டிக்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் எதிர்க்கட்சியினர் இவ்வாறு மின் பந்தங்களை எடுத்து வந்துள்ளனர்.
எதிர்க்கட்சியினரின் இந்த எதிர்ப்புக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் இது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கடும் அச்சுறுத்தல் என கூறியுள்ளனர்.
இது சம்பந்தமாக சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வர ஆளும் கட்சியினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.



