மின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்.

0

நுகர்வோரிடம் இருந்து அறவிடப்பட வேண்டிய, இதுவரை செலுத்தப்படாத மின் பட்டியலின் மொத்த பெறுமதி 42 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது .

இந்நிலையில் மின் கட்டணங்களை செலுத்தாதவர்களுக்கு சிவப்பு பட்டியலை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக நிதி முகாமையாளர் நிஹால் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அவசியப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை மேலதிக நிதி முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் இன்றும் சூழற்சி முறையில் நான்கு மணித்தியாலங்களுக்கு அதிகமான மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

மேலும் இன்று காலை எட்டு முப்பது மணி முதல் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply