தமிழகத்தை சேர்ந்த மேலும் 22 மீனவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றைய தினம் மற்றும் இன்று அதிகாலையுமாக இரண்டு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தற்போது காங்கேசன்துறைக்கு அழைக்கப்பட்டு , கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.



