12 வயதினை உடைய சிறுமியின் வாயில் துப்பாக்கி சூட்டு சம்பவம் நடத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் ஹப்புத்தளை -கொஸ்லாந்தை -கெலிப்பனவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த சிறுமி சிகிச்சைக்காக சீனிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் .
மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் குறித்த சிறுமி சுடப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்



