இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் நிதியமைச்சர்.

0

நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் அடுத்து வரும் சில தினங்களில் புதுடில்லிக்குச் செல்லவுள்ளார் என்று தெரியவருகின்றது.

இவரது இந்த விஜயம் தொடர்பில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை புதுடில்லியில் இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் நாடாளுமன்றில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பித்து விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை கூட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply