துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கு அனுமதி.

0

கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் சில அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளைய தினம் விடுவிக்க முடியும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் துறைமுகத்தில் தற்பொழுது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500 கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் இடம்பெற்ற நிதி அமைச்சருடனான கலந்துரையாடலின்போது குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு முன் நிதியமைச்சின் தலையீட்டில் துறைமுகத்தில் தேங்கியிருந்த 500 கொள்கலன்கள்
விடுவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply