தமிழகத்தில் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
அத்துடன் பல்வேறு கடைகளுக்கு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியது. எனவே இரவு நேர ஊடரங்கு கடந்த 28-ந் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மேலும் தளர்வு அளிக்கப்படுமா என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
இதன்படி இன்று சென்னை, தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு மருத்துவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது.



