டெல்லி புறநகரில் குர்கானில் 109-வது செக்டார் பகுதியில் அமைந்துள்ள அந்த 18-வது மாடி கட்டிடத்தின் உச்சி பகுதி இன்று அதிகாலை திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்நிலையில் மேற்கூரை இடிந்து 18-வது மாடியில் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் விழுந்தது.
இதில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். 18-வது மாடி இடிந்ததால் மற்ற தளங்களில் இருப்பவர்கள் அதிர்வை உணர்ந்தனர்.
அவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அந்த குடியிருப்பு பகுதிக்கு சென்று உயரமான ஏணிகள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கிய பலர் காயங்களுடன் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் குறித்த விபத்தில் 2 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
மீட்பு பணியினை விரைவுபடுத்துவதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.



