நாட்டில் புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு திருத்தப்பட்ட தேர்தல் பதிவேட்டின்படி கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஆசனம் குறைக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் சுட்டிகாட்டியுள்ளன
கடந்த வாகக்காளர் பதிவேட்டின்படி யாழ்ப்பாணத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஆசனம் ஒன்றினால் குறைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியே யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதி அமைந்துள்ளமையும் தேர்தல் குறிப்பிடத்தக்கது.



