உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எந்தவித தட்டுப்பாடும் இன்றி விநியோகிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு முதல் முறையாக இன்றைய தினம் கூடவுள்ளது.
இந்நிலையில் குறித்த குழு கூட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் அந்த அமைச்சில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நியமிக்கப்பட்டது.
மேலும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் முறையான பொறிமுறை ஒன்று முறையாக தயாரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.



