கண்ணாடி தழும்பு மறைய டிப்ஸ்..!!!

0

கண்ணாடி அணிவதினால் ஏற்படும் தழும்பு மறைய டிப்ஸ், அரை வெள்ளரிக்காயை வெட்டி அவற்றில் இருக்கும் தோல் பகுதியை சீவி, மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து தனியாக ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும்.

பின்பு ஒரு சிறிய தக்காளி பழத்தையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும்.

இவற்றையும் ஒரு பவுலில் தனியாக எடுத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளுங்கள்,

அவற்றில் அரைத்து வைத்துள்ள வெள்ளரிக்காய் பேஸ்ட் இரண்டு ஸ்பூன், ஒரு ஸ்பூன் தக்காளி பேஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்பு தழும்புகள் ஏற்பட்ட இடத்தில் இந்த பேஸ்ட்டை அப்ளை செய்யுங்கள்.

இந்த முறையை இரவு தூங்குவதற்கு முன் செய்து மறுநாள், காலை முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கண்ணாடி தழும்பு மறையஆரம்பிக்கும்.

Leave a Reply