வீட்டில் வெண்டைக்காய் இருந்தால் இதை செய்து பாருங்கள்..!

0

தங்கம் போல் முகம் பொலிவுடன் இருக்க நான்கு அல்லது ஐந்து வெண்டைக்காயை எடுத்து சுத்தமாக அலசிக்கொள்ளவும்.

பின் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து மிக்சி ஜாரில் மைபோல் அரைத்து கொள்ளவும்.

அரைத்த கலவையை ஒரு பவுலில் மாற்றி அதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.

பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் சருமம் பளபளப்பாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.

Leave a Reply