போக்குவரத்து கழகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.

0

ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதாலும், நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்து உரையாடுவதாலும் அதிக விபத்து ஏற்படுகிறது.

இதன்பிரகாரம் ஓட்டுநர்கள் பணியின் போது சட்டையின் மேல் பாக்கெட்டில் செல்போன் வைத்திருக்க கூடாது.

அதனை நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிவடைந்த பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நடத்துநர் பகல் நேரங்களில் முன் இருக்கையில் அமராமல் பின்புறம் கடைசி இருக்கையில் அமர்ந்து இரண்டு படிகளையும் கண்காணிக்க வேண்டும்.

பணி நேரத்தில் ஓட்டுநர்கள் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

.

Leave a Reply