போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை தேடும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஃசிரேஷ்டக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் இடம்பெற்ற முப்பத்தி ஒன்பது முச்சக்கரவண்டி விபத்துக்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் போக்குவரத்து விதி மீறல்களில் முச்சக்கர வண்டிகள் முன்நிலையில் உள்ளதாகவும் , அந்த வரிசையில் பேருந்து மற்றும் உந்துருளிகளும் இடம்பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மாதம் இடம்பெற்ற 1,875 சாலை விபத்துகளில் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2,473 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



