பிரபல கல்வியற் கல்லூரியில் பல மாணவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி.

0

பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் பல மாணவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரியில் தேவையான தனிமைப்படுத்தல் உட்பட சுகாதார நடவடிக்கைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை என மாணவர்களும் ஆசிரியர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மாணவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த கல்வியற் கல்லூரியின் தலைவர் கு. துரைராஜசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தொற்று உறுதியான மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் அழைத்துச் சென்றதாகவும் மேலும் பல மாணவர்கள் தங்களது சுய விருப்பத்திற்கு அமைய கல்லூரியில் இருந்து வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தொற்று உறுதியான சில மாணவர்கள் வகுப்பறையில் தனிமைப்படுத்தப்பட்ட தாகவும் கல்லூரியில் போதிய வசதிகள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மாணவர் விடுதியிலேயே தொற்று பரவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply