மேலும் இரண்டு லட்சம் சீமெந்து மூட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சிமெண்டு மூட்டைகள் நாளைய தினம் நாட்டை வந்தடைந்தது.
அத்துடன் 6 லட்சம் சிமெந்து மூட்டைகளை தாங்கிய இரண்டு கப்பல்கள் கடந்த வாரம் நாட்டை வந்தடைந்தது.
இருப்பினும் சந்தையில் அதிகரித்துள்ள கேள்வி காரணமாக சில பகுதிகளில் சீமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை, துறைமுக நகரம் மற்றும் நகர வீடமைப்பு திட்ட நிர்மாணம் உள்ளிட்ட ஏனைய தனியார் துறை கட்டுமான பணிகளுக்காக அதிக கேள்வி உள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டனர்.



