ஈருருளியின் செயற்பாட்டை அதிகரிப்பதற்கு தீர்மானம்.

0

ஈருருளியின் செயற்பாட்டை அதிகரிப்பதற்கு சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் வளி மாசடைவதை குறைப்பது இதன் ஒரு பிரதான நோக்கம் ஆகும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் வாகன நெரிசல் ஏற்படும் போது பயணிக்கும் வாகனம் ஒன்றினால் அரசாங்கத்துக்கு கிலோமீட்டர் ஒன்றுக்கு 103 ரூபா நட்டம் ஏற்படுவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் ஈருருளியினை பயன்படுத்துவதன் மூலம் ஒரு கிலோ மீட்டருக்கு 236 ரூபாவிற்கும் அதிக பணத்தை சேமிக்க முடியும்.

இதனால் அரசாங்கத்துக்கு 340 ரூபாய் லாபம் ஏற்படும் என சுற்றாடல் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பிரகாரம் இரவில் பயன்பாட்டை ஊக்குவிக்க அதற்கான நடவடிக்கை எடுக்க அமைச்சரவை பத்திரம் ஒன்று தயார் செய்யப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply