கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.



