ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த நபர் தங்காலையில் காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 9 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது.
அத்துடன் தங்களை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



