பரீட்சை சான்றிதழ் வழங்கும் சேவை இடைநிறுத்தம்.

0

பரீட்சை பெறுபேறு வழங்கும் ஒருநாள் சேவையை இடைநிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த செயற்பாடு இன்று முதல் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகவே, பெறுபேற்று சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் நிகழ்நிலை முறையிலும் ,மின்னஞ்சல் ஊடாகவோ மாத்திரமே வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பெறுபேறு சான்றிதழ்களின் தேவைக்கு அமைய, வெளிவிவகார அமைச்சுக்கோ அல்லது துரித அஞ்சல் சேவை மூலமாகவோ விண்ணப்பதாரி முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும் குறித்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரவேசிக்கவும்.

Leave a Reply