ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சில்லக்கூற்று புத்தானம் அருகே நெல்லூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதி ஊடாக வந்த லொறி மற்றும் காரை காவல்துறையினர் விசேட சோதனைக்குட்படுத்த முயன்றனர்.
இதன்போது காவல்துறையினரை பார்த்ததும் கடத்தல்காரர்கள் காவல்துறையினர் மீது லொறியை ஏற்றுவது போல் வந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
இருப்பினும் காவல்துறையினர் அவர்களை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.
லொரி மற்றும் காரில் இருந்த 55 கூலித் தொழிலாளர்கள் மற்றும் 3 கடத்தல்காரர்கள் என 58 பேரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் போலீசார் மீது வீசப்பட்ட 24 கோடரிகள், லொறியில் இருந்த ரூபாய் 36 லட்சம் பெறுமதியான 45 செம்மரங்கள், 31 செல்போன்கள் , ரூபாய் 75,250 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



