ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கத்தினர்.

0

மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய மாகாண ஆளுநரின் தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாகவே குறித்த நியமனம் இதுவரை வழங்கப்படாதுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளருக்கான நியமனம் வழங்கப்படவிருந்த நிலையில் அது மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டது.

இதற்கமைய பயிற்சிகளை நிறைவு செய்த ஆசிரிய உதவியாளர்களுக்கான எம் நியமனத்தை உடனடியாக வழங்குவது தொடர்பில் திறைசேரியின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார் .

இந்நிலையில் அரசாங்கத்தினால் உடனடியாக அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply