அனைத்துப் பிரஜைகளும் டிஜிட்டல் செயலிகளை வைத்துக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு, பிறப்பு சான்றிதழ் மற்றும் திருமண சான்றிதழ் உள்ளிட்ட சகல அத்தியாவசிய தனிப்பட்ட ஆவணங்களையும் தங்களது கையடக்க தொலைபேசிகளில் டிஜிட்டல் செயலிகளாக வைத்துக் கொள்வதற்கான வசதிகள் இதன் மூலம் கிடைக்கவுள்ளது .
அத்துடன் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இணைந்து செயற்படுத்தும் இந்த வேலைத் திட்டத்தினை இரண்டரை வருட காலத்திற்குள் நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறு இந்த வருடத்தில் 100 நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் வரி மற்றும் ஏனைய கட்டணங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக பொதுமக்கள் செலுத்த முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



