இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட் நோயாளர்கள்.

0

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு நோயாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தினர் உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய தொழில்நுட்பப் பிரிவின் பணிப்பாளர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

அத்துடன் மருத்துவ பிராணவாயு வழங்கப்பட வேண்டிய நோயாளர்களின் எண்ணிக்கையும் 8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் கர்ப்பிணி தாதியர்கள் உட்பட 62 தாதியர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் ஏனைய வைத்தியசாலைகளில் அதிகளவிலான பணிக் குழாமினருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Leave a Reply