சந்தானம் படத்தின் டீஸர்.

0

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம்.

சமீபத்தில் இவர் நடிப்பில் டிக்கிலோனா என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

குறித்த படம் தெலுங்கில் நவீன் பொலி செட்டி நடிப்பில் கடந்த இரண்டாவது 19 ஆம் ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும் .

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கி வருகிறார். ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசரை நடிகர் ஜீவா மற்றும் நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இதன் டிசர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Reply