மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் புதிய பகுதியில் பொது போக்குவரத்து செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதியூடாக இன்று முதல் பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கொழும்பிலிருந்து கண்டி மற்றும் கொழும்பிலிருந்து குருநாகல் வரை சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பேருந்துகள் மாத்திரமே இவ்வாறு குறித்த பகுதி ஊடாக இன்று முதல் சேவையில் ஈடுபடும்.
மேலும் கொழும்பிலிருந்து குருணாகலுக்கு 390 ரூபாவாகவும் கொழும்பிலிருந்து கண்டிக்கு 500 ரூபாவாகவும் சொகுசு பேருந்து கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.



