அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை.

0

அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் வீடு உட்பட ஐம்பதுக்கு மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றது.

இந்நிலையில் அமைச்சர் கேபி அன்பழகன் கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.

அத்துடன் கேபி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கேபி அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply