தற்போது நாட்டில் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி என் பின்னர் சீமெந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வு கிடைக்கப்பெறும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் 6 லட்சம் சிமெந்து மூட்டைகளை ஏற்றிய கப்பல் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவ்வாறு இந்தோனேசியாவில் இருந்து வந்த கப்பலில் இரண்டு லட்சம் சீமெந்து மூட்டைகளும், பாகிஸ்தானிலிருந்து வந்த கப்பலில் 4 இலட்சம் சீமெந்து மூட்டைகளும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சீ மெந்து மூட்டைகள் யாவும் துறைமுகத்தில் இருந்து விடுவிக்க பட்டுள்ளதாகவும், விரைவில் சந்தைகளுக்கு விநி யோகிக்கப்பட உள்ளதாகவும் சீமெந்து இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



